ஓகஸ்ட் மாதம் யாருக்கெல்லாம் ராஜயோகம் காத்திருக்கு!

0

ஓகஸ்ட் மாதத்தில் முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நிகழப்போகிறது. சில கிரகங்கள் புதிய இடத்தில் புதிய கூட்டணி சேருகிறது. சில கூட்டணி பிரிகிறது.

ஓகஸ்ட் மாதம் சூரியன் கடகம் ராசியில் பாதி நாட்களும், சிம்மம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். இந்த சூரியனுடன் கூடவே புதன் பயணக்கிறார்.

சுக்கிரன் ராகு உடன் பயணிக்கிறார். இந்த மாதம் பலருக்கும் யோகங்கள் நிறைந்த மாதமாக அமைகிறது. இந்த மாதமும் லாக்டவுன் நீடிக்கிறது. நோய் பாதிப்பு எதுவும் இல்லாமல் இந்த மாதத்தையும் ஆரோக்கியமாக கடத்தி விடலாமா என்று பலரும் யோசிக்கலாம்.

2020ஆம் ஆண்டைப் பொருத்தவரை எல்லோரும் உயிரோடு இருப்பதே லாபம்தான் என்றாலும் துலாம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

துலாம்

துலாம் ராசிக்கு கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தை உங்களுக்கு இந்த மாதம் லாப ஸ்தானத்தில் உள்ள சூரியன் புதன் மாத பிற்பகுதியில் விரைய ஸ்தானத்திற்கு மாறுகின்றனர். ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன் ராகு இணைந்திருக்கின்றனர்.

பத்தாம் வீட்டில் சூரியன் புதன் கூட்டணி சேர்ந்திருக்கிறது மாத பிற்பகுதியில் சூரியன் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து புதனோடு சேர்ந்து யோகத்தை கொடுக்கப்போகிறார்.

இதுநாள் வரைக்கும் மன ரீதியாக சின்னச் சின்ன குழப்பங்களுடனேயே சில மாதங்களை கடத்தியிருப்பீர்கள் இந்த மாதம் குழப்பங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். உங்களுக்கு தொழில் வேலை வாய்ப்பு நன்றாக இருக்கும்.

செவ்வாய் சனி பார்வையால் வேலையில் இருந்த சங்கடங்கள் தீரும். உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். நிறைய நல்ல செய்திகள் உங்களுக்கு தேடி வரும்.

ஆறாம் வீட்டில் இருக்கும் செவ்வாய் 16ஆம் தேதிக்கு மேல் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைந்து உங்க ராசியை நேரடியாக ஏழாம் பார்வையாக பார்ப்பதால் உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும்.

செவ்வாய்க்கு குரு பார்வையும் கிடைக்கிறது. குரு பார்வை பெற்ற செவ்வாயினால் உங்களுக்கு சில மாதங்களாக உங்களை பாடாய் படுத்தி வந்த நோய் பிரச்சினைகள் நீங்கும். பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகரிக்கும்.

மனதாலும் உடல் ரீதியாகவும் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். பிசினஸ் பார்ட்னர்கள் மூலம் இருந்த சிக்கல்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். அர்த்தாஷ்ட சனி அம்மாவின் உடல் ஆரோக்கியத்திலும் பிரச்சினை ஏற்படுத்தி வந்தது இனி அந்த பிரச்சினைகள் தீரும். மனதில் இதுநாள் வரை இருந்த பயம், பதற்றங்கள் நீங்கும்.

மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல மாதம், எதிர்கால படிப்புக்காக நீங்க செய்யும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். புத ஆதிபத்ய யோகத்தினால் உங்களுக்கு கலைத்துறை சார்ந்த படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

நீங்க விரும்பிய படிப்புகள் கிடைக்கும். பயணங்களில் கவனமாக இருங்க வேகமாக போவதை விட நிதானமாக போங்க. திருமண சுப காரிய முயற்சிகளில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பண்ணுங்க. கணவன் மனைவி இடையே மாத முற்பகுதியில் சின்னச் சின்ன சண்டைகளும் மாத பிற்பகுதியில் சண்டைகள் நீங்கி சந்தோஷங்களும் அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த மாதத்தில் உங்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே, சூரியனும் புதனும் உங்க ராசிக்கு இந்த மாதம் ஒன்பது மற்றும் பத்தாம் வீடுகளில் பயணிக்கிறார்.

செவ்வாய் மாத முற்பகுதியில் ஐந்தாம் வீட்டிலும் மாத பிற்பகுதியில் ஆறாம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார். குரு கேது இரண்டாம் வீட்டிலும் சனி மூன்றாம் வீட்டிலும் பயணிக்கின்றனர்.

சுக்கிரன் ராகு இந்த மாதம் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணிக்கிறார். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பணவருமானத்தால் உங்க கடன்கள் அடைபடும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். விருச்சிகம்

ராசிக்காரங்களுக்கு இந்த மாதம் நிறைய பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன கசப்புணர்வுகள் வந்து போகும்.

வீண் விவாதங்கள் ஏற்படும். மாத பிற்பகுதியில் ஆட்சி பெற்ற சூரியன் பத்தாம் வீட்டில் இணைவது சிறப்பு.

வேலையில் இடமாற்றம், சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். ரொம்ப நாளாக தேர்வு எழுதி அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். அரசு தொடர்பான காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.

உங்க ராசி அதிபதியும் ஆறுக்கு அதிபதியுமான செவ்வாய் மாத பிற்பகுதியில் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் திடீர் ராஜயோகம் வரும்.

மாதம் முழுவதும் எட்டாம் வீட்டில் சுக்கிரன் ராகு சஞ்சாரம் சாதகமாக இல்லை என்பதால் எதிர்காலத்திற்கான முக்கிய முடியவுகளை எடுக்காதீங்க. திருமணம் சுப முயற்சிகளை எடுக்க வேண்டாம். காதல் வாழ்க்கையில் கசப்புணர்வுகளை ஏற்படும்.

விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்க. பணம் நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்காதீங்க அப்புறம் திரும்ப வர வாய்ப்பு இல்லை.

தனுசு

தனுசு ராசிக்கு இந்த மாதம் ராசிக்குள் குரு கேது, ஏழாம் வீட்டில் சுக்கிரன், ராகு, இரண்டாம் வீட்டில் சனி, நான்காம் வீட்டில் செவ்வாய், எட்டாம் வீட்டில் சூரியன், புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. மாத முற்பகுதியில் குடும்ப ஸ்தானத்தில் உள்ள சனி எட்டாம் வீட்டில் உள்ள சூரியன் புதன் பார்வையை பார்ப்பதால் சில சங்கடங்கள் ஏற்படும்.

உங்க வேலையில் சில பிரச்சினைகள் வரலாம் எதையும் தெளிவாக யோசித்து முடிவு பண்ணுங்க. உங்க பொறுப்பை தட்டிக்கழிக்காதீங்க. வீண்பழிக்கு ஆளாக வேண்டியிருக்கும். குருவின் பார்வை உங்க ராசியில் இருந்து ஐந்து ஒன்பதாம் வீட்டிற்கு வருகிறார். மாத முற்பகுதியில் சுமாராக இருந்தாலும் மாத பிற்பகுதியில் கிரகங்கள் கூட்டணி சஞ்சாரம் அற்புதமாக இருக்கிறது.

குரு ராசியில் இருக்க ஐந்தாம் வீட்டில் செவ்வாய், ஒன்பதாம் வீட்டில் சூரியன் ஆட்சி பெற்று புதனோடு இணைந்திருக்கிறார். இந்த கால கட்டத்தில் புது வேலைக்கு முயற்சி செய்யலாம்.

பூர்வ புண்ணிய ஸ்தானமும் பாக்ய ஸ்தானமும் வலுத்திருக்கும் போது அந்த இடத்தில் குருவின் பார்வையும் கிடைக்கிறது. சொத்து சேர்க்கை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் உங்களுக்கு லாபம் கிடைக்கும், திருமணம், சுப காரிய முயற்சிகளில் சில தடைகள் ஏற்படலாம் இந்த மாதம் தவிர்த்து விடலாம்.

மாணவர்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாதம். உயர்கல்வி முயற்சியில் நன்மை நடக்கும். நினைத்த சப்ஜெக்ட் நினைத்த காலேஜில் படிக்க இடம் கிடைக்கும்.

மகரம்

மகரம் ராசிக்கு இந்த மாதம் உங்க ராசிநாதன் உங்க ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்க விரைய ஸ்தானத்தில் குரு, கேது, மூன்றாம் வீட்டில் செவ்வாய், ஆறாம் வீட்டில் சுக்கிரன், ராகு, ஏழாம் வீட்டில் சூரியன் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

பணம் தயாராக இருந்தால் நீங்க மாத பிற்பகுதியில் சொத்து, வீடு, வண்டி வாகனம் வாங்கலாம். இருக்கிற வேலையில் கவனமாக வேலை பாருங்க. மன உளைச்சல் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருங்க.

சண்டை சச்சரவு கார சார விவாதம் ஏற்படும். பேச்சில நிதானமாக இருங்க. கோபமாக பேச பேச பிரச்சினைகள்தான் அதிகமாகும். இப்ப இருக்கிற சூழ்நிலையில சிலருக்கு வேலை போயிருக்கலாம், அதுவே பிரச்சினைக்கு அடித்தளமாக இருக்கும்.

நிம்மதியான சூழ்நிலைக்கு மாற்ற வேண்டியது உங்க கையிலதான் இருக்கு. இந்த மாதம் திருமண சுபகாரியத்திற்கு முயற்சிகள் செய்ய வேண்டாம். தடைகள் ஏற்படலாம். காரணம் காதல் திருமணம் எல்லாம் இந்த மாதம் அவசரப்பட வேண்டாம் எதிர்ப்புகள் அதிகம் ஆகும். என்னடா வாழ்க்கை இது என்று விரக்தியான மனநிலையில் இருப்பீர்கள்.

கொஞ்சம் பொறுமையாக இருங்க. பிசினஸ் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். ஏழரை சனியில் ஜென்ம சனி நடப்பதால் நீங்க எச்சரிக்கையாக இருங்க. பயணங்கள் எதுவும் சாதகமாக இருக்காது. வேகமாக போவதை விட நிதானமாக போங்க. பெற்றவர்களோட ஹெல்த் கவனம். மருத்துவ செலவு வரும். குடும்ப விசயங்களில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள்.

மாத பிற்பகுதியில் எட்டுக்கு அதிபதி சூரியன் எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து உங்க குடும்ப ஸ்தானத்தை பார்ப்பது சிறப்பு. திடீர் யோகங்கள் மூலம் பணம் வரும். இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டிய மாதம் என்பதால் எச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் இருங்க.

கும்பம்

ராசிநாதன் சனி 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். 11ஆம் வீட்டில் குரு, கேது, இரண்டாம் வீட்டில் செவ்வாய், ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் ராகு ஆறாம் வீட்டில் சூரியன்,புதன் கூட்டணி மாத பிற்பகுதியில் ஏழாம் வீட்டிற்கு மாறுவது சிறப்பு. இந்த மாத துவக்கத்தில் உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சலை தரும்.

இந்த மாதம் தேவையில்லாத விரைய செலவுகள் வரும். வாழ்க்கை துணை உடல் ஆரோக்கியத்திலும் பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்திலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்க.

மாத பிற்பகுதியில் செவ்வாய் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு சென்று மேஷம் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் தேடி வரும். சிறு பயணங்களால் நன்மைகள் நடைபெறும். சிம்மத்தில் சூரியன் ஆட்சி பெறுவதால் கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஏழரை சனி நடைபெறுவதால் எச்சரிக்கையாக இருங்க. உங்களுக்கு இந்த மாதம் சின்னச் சின்ன பாதிப்புகள் வந்தாலும் அதை அசால்டாக சமாளிப்பீர்கள். குருவின் பார்வை உங்க ராசிக்கு ஏழாவது வீட்டின் மீது விழுகிறது.

திருமணம் சுப காரியங்களுக்காக முயற்சி செய்பவர்கள் மாத பிற்பகுதியில் முயற்சி செய்யலாம். வரன் பேசி முடிக்கலாம். எந்த ஒரு பெரிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பாகவும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க.

மீனம்

மீனம் ராசிக்கு உங்க ராசிநாதன் குரு ராசிக்கு பத்தாம் வீட்டில் கேது உடன் சஞ்சரிக்கிறார். லாப ஸ்தானத்தில் சனி, உங்க ராசியில் செவ்வாய், உங்க

ராசிக்கு நான்காம் வீட்டில் சுக்கிரன், ராகு, ஐந்தாம் வீட்டில் சூரியன், புதன் என கிரகங்கள் சஞ்சாரம் அமைந்துள்ளது. உங்களுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகமாகும்.

துன்பங்கள் துயரங்கள் நீங்கும். உங்க தைரியம், தன்னம்பிக்கை அதிகமாகும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் நடக்கும். கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருங்க. உங்க உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மாத பிற்பகுதியில் செவ்வாய் வாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார். குருவின் பார்வையும் இரண்டாம் வீட்டிற்கு கிடைக்கிறது. கொடுத்த வாக்கினை காப்பாற்றுவிர்கள். குடும்ப சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும்.

புதிய சொத்துக்களை கூட்டாகவும் வாங்கலாம். வேலையில் பெரிய மாற்றங்கள் எதுவும் வராது இருக்கிற வேலையில் பிரச்சினை இல்லாமல் கவனமாக இருங்க.

இப்ப இருக்கிற சூழ்நிலையில் வேலையை தக்க வைத்துக்கொள்வதே நல்லது. புதிய வேலை எதுவும் மாற முயற்சி செய்ய வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் கவனமாக பேசுங்க. லாப சனி உங்க வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல லாபத்தை கொடுப்பார். சூரியன் மாத பிற்பகுதியில் ஆறாம் வீட்டிற்கு நகர்கிறார்.

ஆறுக்கு அதிபதி சூரியன் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகம். எதிரிகள் தொல்லை நீங்கும். எதிர்பாராத பண வரவு வரும். இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. கால்வலி பிரச்சினைகள் வரலாம். வயிறு தொடர்பான

பிரச்சினைகளும் வரும். திருமணம் தொடர்பான முயற்சிகளை செய்யலாம். குடும்பத்தில் எந்த குழப்பமும் இல்லை குதூகலமாக இருக்கும். மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு சொந்தங்களுடன் கூடி மகிழக்கூடிய மாதமாகும்.