எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று(புதன்கிழமை) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.