கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கைக்கு வருகை தர முடியாமல் ஓமானில் சிக்கியிருந்த 315 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
ஓமானின் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த இலங்கையர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) காலை வந்தடைந்துள்ளனர்.
குறித்த அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களை தனிமைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.