கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்ணெருவர் திக்கோடையில் மடக்கி பிடிப்பு

0

மட்டக்களப்பு போரதீவுப்பற்று – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கிராம இளைஞர்களால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

திக்கோடை புதிய வீட்டுத்திட்டத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதர்களின் நடமாட்டத்தை அவதானித்த இளைஞர்கள் இரகசியமான முறையில் சுற்றி வளைத்து குறித்த பெண்ணையும் கசிப்பு உற்பத்தி செய்த இடத்தையும் பிடித்துள்ளனர்.

பின்னர் கிராம சேவையாளருக்கும், வெல்லாவெளி பொலிஸாருக்கும் அறிவித்து சம்பவ இடத்திற்கு வரவழைத்து பொலிஸாரிடம் குறித்த பெண்ணையும், கசிப்பு உற்பத்திக்கான பொருட்களும் ஒப்படைக்கப்பட்டதுடன் பொலிஸார் அப்பெண்ணிண் வீட்டில் தேடுதல் நடத்திய போது பொலித்தீன் பையில் கசிப்பு பாவிக்காப்படாத மலசல கூட குழாயினுள் இருந்து எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.