கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பிக்கு கொரோனா!

0

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனக்கும், தனது மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

தன்னுடன் அண்மை காலத்தில் நெருங்கி பழகியவர்களை தனிமையில் இருந்து, பரிசோதனைகளை நடத்திக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.