கடத்தப்பட்டாரா ஜனாதிபதி கோட்டாபய? பௌத்த தேரர் வெளியிட்டுள்ள தகவல்

0

பௌத்த தேரர்கள் பலர் ஒன்றிணைந்து பதவிக்கு கொண்டு வந்த, தைரியமாக தீர்மானங்களை மேற்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது காணாமல்போயுள்ளதாக, தென்னிலங்கையின் பௌத்த தேரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட சிங்கள ராவய அமைப்பின் எல்லே குணவன்ச தேரர், எவருக்கும் அஞ்சாது தீர்மானங்களை மேற்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் விடயங்களில் முறையற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு பணியாற்றுவதாக கூறியுள்ளார்.