தேசிய மொழி கல்வி நிறுவனத்தில் இரண்டாம் மொழி கற்கைகள் பயிற்சி ஆசிரியர்களாக பயிற்சி பெற்ற 1,300 பேருக்கும் நியமனம் வழங்கப்படாமலுள்ள விவகாரத்தில் ஜனாதிபதி செயலகமும் கைவிரித்துள்ளது.
எனினும், பிரதமரின் கையொப்பத்துடன் அவர்கள் சேவையை உறுதிப்படுத்த முடியாதென ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் செப்டம்பர் 10 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் ஆகியோர் ஆசிரியர் பயிற்சிக்கான நியமனக் கடிதங்களை வழங்கியதாக மொழிப் பயிற்சி ஆசிரியர்கள் ஜனாதிபதி செயலகத்தின் செயலாளருக்கு தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அவர்கள் பயிற்சி நெறியை பூர்த்தி செய்ய அவர்களுக்கு வசதி செய்யப்படலாம் என்று ஜனாதிபதி செயலாளர் அவர்களுக்கு அறிவித்துள்ளார்.
இந்த செயற்பாடு முன்னாள் அமைச்சர் மனோ கணேசனிற்கு பாரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவலறிந்த வட்டாரத்திலிருந்து தகவல்.