கடந்த 12 மணித்தியாலங்களில் கிழக்கு மாகாணத்தில் 41 புதிய தொற்றாளர்கள்

0

கடந்த 12 மணித்தியாலங்களில் கிழக்கு மாகாணத்தில் 41 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளார்கள்.

இதனால் கிழக்கு மாகாணத்தில் இதுவரை பதிவான தொற்றாளர்களது எண்ணிக்கை 1058 ஆக அதிகரித்துள்ளது.

கிழக்கில் புதிய தொற்றாளர்களாக

கோமரங்கடவலை – 01

கல்முனை வடக்கு – 03

கல்முனை மேற்கு – 26

சாய்ந்தமருது – 01

காரை தீவு – 01

சம்மாந்துரை – 01

மட்டக்களப்பு – 01

காத்தான்குடி – 04

வெல்லாவெளி – 01

ஆரையம்பதி – 01

தமண – 01ஆகிய பகுதிகளில் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் 126 தொற்றாளர்களும் மட்டக்களப்பில் 138 தொற்றாளர்களும் அம்பாறையில் 26 தொற்றாளர்களும் கல்முனையில் 768 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.

மேலும் இதுவரை கிழக்கில் கொரோனா தொற்று காரணமாக 5 மரணங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.