கடந்த 18 நாள்களில் சமூகத்தில் இருந்து ஒரு கொரோனா தொற்றாளர் கூட பதிவாகவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 3 வாரங்களாக சமூகத்திலிருந்து தொற்றாளர் பதிவாகாமை இலங்கையர் என்ற ரீதியில் ஓரளவு மகிழ்ச்சியைத் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரை 584 தொற்றாளர்கள் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதுடன், 434 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர், முதியவர்கள் என, 7 இலட்சத்து 97 ஆயிரத்து 635 பேருக்கு மே மாதகொடுப்பனவாக மூவாயிரத்து 988 மில்லியன் ரூபாய் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.