கடந்த 48 மணித்தியாலங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் பதிவாகவில்லை – சுகாதார அமைச்சு!

0

கடந்த 48 மணித்தியாலங்களில் நாட்டில் எந்வொரு கொரோனா தொற்றாளரும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் 102 கொரோனா தொற்றாளர்கள் பதிவான நிலையில் 6 பேர் சிகிச்சைகளுக்கு பின்னர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

96 கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், 237 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.