கடற்படையினர் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என தெரிவிப்பு!

0

கடற்படையினர் குறித்து மக்கள் தேவையற்ற சுகாதார ரீதியான பயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படையின் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடற்படையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 60 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த முகாமில் இருந்த நான்காயிரம் வீரர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனரா? என்பதை அறிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கி பழகிய ஏனைய கடற்படை வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

கீழ்மட்ட அங்கத்தவர்களை அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவுருத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

விடுமுறையில் இருக்கும் அல்லது முகாமுக்கு வெளியில் இருக்கும் நபர்கள் தொடர்பான தகவல்களை 0112 44 53 68 அல்லது 0117 19 22 51 என்ற தொலைப்பேசி இலக்கங்களை அழைத்து அறிந்துக்கொள்ள முடியும்.

மேலும் 0112 44 14 54 என்ற தொலைநகல் இலக்கத்திற்கும் 011 220 13 65 என்ற வட்ஸ் அப் இலக்கத்திற்கும் தொடர்பை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.