கடற்படை வீரர்களுக்கு பயணக்கட்டுப்பாடு – 400 பேருக்கு இன்று பீ.சீ.ஆர் சோதனை!

0

கடற்படை வீரர்கள் அனைவருக்கும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படாத நிலையில் அனுமதி வழங்கப்பட்ட கடமைகளுக்கு மாத்திரமே முகாம்களை விட்டு வெளியேற முடியும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், செலிசர கடற்படை முகாம் தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் இருந்து வெளியேறவும் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்படையைச் சேர்ந்த 70 பேர் இதுவரை கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த கடற்படை வீரர்களுடன் நெருங்கிப் பழகிய சகலரையும் பீ.சீ.ஆர் சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக நான்காயிரம் கடற்படையினருக்கு பீ.சீ.ஆர் சோதனை செய்யப்படவுள்ளதாகவும், இதன் முதல் கட்டமாக இன்று 400 பேருக்கு பீ.சீ.ஆர் சோதனை செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.