கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

0

வங்காள விரிகுடாவை அண்மித்த கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

நீண்ட நாள் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களும் இது குறித்து எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கை பிரிவின் உதவிப் பணிப்பாளர் பத்மபிரிய திசேரா தெரிவித்துள்ளார்.

இதனைத் தவிர வங்காள விரிகுடாவின் மத்திய, கிழக்கு, வட கிழக்கு கடற்பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியமுள்ளதால், ஆழமான கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என ஒரு நாள் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.