கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் 10 பேர் கைது

0

கடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம், இரணைமடு பகுதியில் வைத்தே நேற்று(வியாழக்கிழமை) மாலை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கப்பல் ஊடாக அவுஸ்ரேலியா நோக்கி செல்ல திட்டமிட்டிருந்தமை விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள 10 சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்காக சிலாபம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.