எதிர்வரும் மூன்றாம் திகதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் கடந்த தினங்களில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கட்சிகளின் செயலாளர்களினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முழுமையாக முன்னெடுக்க முடியாது உள்ளதாக கட்சிகளின் செயலாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்காரணமாக எதிர்வரும் மூன்றாம் திகதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.