இலங்கையின் பல மாவட்டங்களில் கட்டுக்கடாத வகையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலைமை நீடித்தால் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான விடயம் என சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு அட்டளுகம போன்ற பிரதேசங்களின் மக்கள் வழங்கும் ஆதரவு மிகவும் குறைவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தலை மீறி சென்று பொலிஸார் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு செய்தால் சுகாதார ஊழியர்களுக்கு கண்காணிப்பை மேற்கொள்ள இலகுவாக இருக்கும். அவ்வாறு செய்யவில்லை என்றால் வைரஸ் பரவல் எங்கு சென்று முடியும் என கூற முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்பார்க்காத அளவு வேறு மாவட்டங்களிலும் அதிகமான கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் ஹரித அலுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.