அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை திறந்து சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு கொண்டு வரும் முறை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் கலந்துரையாடலில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறந்து சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைக்கு வருவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சுகாதார பாதுகாப்பிற்கமைய சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.