கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பதில் மீண்டும் சிக்கல்

0

எதிர்வரும் 26ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தல விமான நிலையத்தை மீண்டும் திறப்பது தொடர்பில் உறுதியான தீர்மானத்திற்கு வரவில்லை என, விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ஜீ.ஏ.சந்திசிரி தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கு தேவைாயன சூழல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக தயாரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையத்தை மீண்டும் திறப்பது தொடர்பிலான ஒத்திகை ஒன்று எதிர்வரும் 23ஆம் திகதி நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான நிலைய தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த செப்டெம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த விமான பயணிகள், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்து தீர்வை வரியற்ற பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.