கண்டி – உடவத்தகெலே வனப் பகுதியிலுள்ள குரங்குகள் தொடர்ச்சியாக இறந்து வருகின்ற நிலையில், குரங்குகளின் உடல் மீதான பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பிரிவில் இந்த பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குரங்குகளுக்கு கொவிட் வைரஸ் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே, உடல்கள் மீது பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குரங்குகளின் உடல்கள் மீது நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் குரங்குகளுக்கு கொவிட் தொற்று இல்லை என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
குரங்குகள் நஞ்சு தன்மை வாய்ந்த உணவு வகைகளை உட்கொண்டமையே, இந்த இறப்புக்கான காரணம் எனவும், குரங்குகளுக்கு கொவிட் வைரஸ் தொற்று ஏற்படவில்லை எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பிரிவின் பேராசிரியர் காவிந்த விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.