கண்டியில் கட்டிடடம் சரிந்ததில் சிலர் மாயம்: குழந்தையொன்று மரணம்

0

கண்டியில் கட்டிடமொன்று இன்னொரு கட்டிடத்தின் மீது சரிந்து விழுந்ததில் பலர் காணாமல் போயுள்ளனர்.

அத்துடன் கட்டிடத்தில் இருந்து இன்னும் சிலர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கண்டி-புவெலிகடை பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

மீட்கப்பட்டவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.