இலங்கையில் பாடசாலை மாணவர்கள் கண் நோயினால் பாதிக்கப்படும் நிலைமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாணவர்கள் இணையம் ஊடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ள மாத்தறை வைத்தியசாலையின் கண் வைத்தியர் பிரியங்க இந்தவெல தெரிவித்துள்ளார்.
கண் நோயினால் பாதிக்கப்படும் மாணவர்கள் 20 மற்றும் 30 பேர் தினமும் வைத்தியசாலைக்கு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கணனி அல்லது தொலைபேசி மூலம் மாணவர்களின் கண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதனை அவதானிக்க முடிவதாக கொழும்பு தேசிய கண் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
அதிக நேரம் கணனி பயன்படுத்தினால் அடையாளம் காணப்படாத கண் நோய் ஒன்று ஏற்படும். கண் தொடர்பான நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக உங்கள் பிள்ளைகளை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுகள்.
அடிக்கடி வேண்டும் என்றே கண் சிமிட்டுவதனை காண முடியும். எனவே மாணவர்கள் ஓய்வு எடுத்து கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.