கதிர்வேலாயுத சுவாமிக்கு தொண்டு செய்த கதிர் இளைஞர்கள்

0

ஆயித்தியமலை
ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு ஆயித்தியமலை கதிர் இளைஞர் கழகத்தினால் இன்று ஞாயிற்றுக்கிழமை சிரமதான பணி ஒன்று முன்னெடுப்பு.

கதிர் இளைஞர் கழக தலைவர் தலைமையில் நடைபெற்ற இச் சிரமதான பணியில் இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டதுடன் ஆலய வளாகம் சிறப்பான முறையில் துப்பரவு செய்யப்பட்டது.
அத்தோடு பயன் தரு பூக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டது.