கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு

0

கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கிஸ்தவர்களினால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையிலயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து இவ்வாறு விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஈஸ்டர் பண்டிகையின் போது மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது 350 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.