கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இதுவரையில் 519 பேருக்கு கொரோனா தொற்று!

0

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் மாத்திரம் இதுவரையில் 519 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை 800 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்காக கடந்த மார்ச் முதல் ஜுலை மாதம் வரை வருகைதந்த அவர்களின் உறவினர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க, கந்தகாடு புனர்வாழ்வு மையம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கந்தக்காடு புனர்வாழ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுடன் தொடர்பினை பேணியவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.