கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 25 பேர் வெளியேற்றம்!

0

கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 25 பேர் இன்று(வெள்ளிக்கிழமை) வீடு திரும்பியுள்ளனர்.

கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வெளியேறிய நான்காவது குழு இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் புனானை தனிமைப்படுத்தல் மத்தியநிலையத்திலிருந்து 163 பேர் தங்களுக்கான தனிமைப்படுத்தல் சிகிச்சை காலத்தினை நிறைவு செய்துக்கொண்டு திரும்பியுள்ளனர்.

இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தல் மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.