கந்தளாயில் விபத்து: பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு- இருவர் படுகாயம்

0

கந்தளாய்- புகையிரத கடவையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயணித்த கார்வொன்று  விபத்துக்குள்ளானதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் காரின் சாரதியும் பொலிஸ் உத்தியோகத்தருமான மற்றொருவர் படுகாயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அதிதீவிர கிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று (திங்கட்கிழமை) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், மாத்தளை பகுதியைச் சேர்ந்த டி.எல்.சிறிசேன (55 வயது) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலையிலிருந்து கந்தளாயிக்குச் சென்ற கார் புகையிரத கடவையை கடக்க முற்பட்டபோதே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையிலேயே  இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்