கன்னி அமர்வில் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

0

9ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

கூட்டத்தொடரில் கலந்துகொள்ளுமாறு தெரிவு செய்யப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரினால் வர்த்தமானியில் பெயர் வௌியிடப்பட்ட 223 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

9 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு தொடர்பிலான மேலதிக தகவல்களை நாடாளுமன்ற இணையத்தளத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.