யாழ் பல்கலைகழக வவுனியா வளாகத்தில் கற்றுவரும் கம்பஹா பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் காய்ச்சல் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவிக்கு நேற்று(செவ்வாய்கிழமை) மாலை காய்ச்சல் ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கம்பஹா மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச்சேர்ந்த வவுனியா வளாகத்தில் கல்விகற்றுவரும் 90 மாணவர்களிற்கு நேற்று காலை பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.