கம்பஹா மாவட்டத்தில் மேலும் 14 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு

0

கம்பஹா மாவட்டத்தில்  ஜா-எல, கந்தான மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவு ஆகிய பகுதிகளுக்கு உடனடியாக அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கம்பஹா, கிரிந்திவெவல, தொம்பே, பூகொட, கனேமுல்ல, வீரகுல, வெலிவேரிய, மல்வத்துஹிரிபிட்டிய, நிட்டம்புவ, மீரிகம, பல்லேவெல, யக்கல, ஜாஎல மற்றும் கந்தான ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 17 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய, மினுவாங்கொட, வெயாங்கொட மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.