கருணா அம்மானிடம் விசாரணைகளை மேற்கொள்ள 02 குழுக்கள் அம்பாறை, மட்டக்களப்புக்கு விரைந்தன

0

கருணா அம்மானிடம் விசாரணைகளை மேற்கொள்ள 02 குழுக்கள் அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்கு சென்றுள்ளன என பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதி அமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் உடல்நலக் குறைவால் சி.ஐ.டி.யில் முன்னிலையாக முடியாதுள்ளதாக தனது சட்டத்தரணியின் ஊடாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் குணமடைந்த பின்னர் தனிப்பட்ட தினத்தில் சி.ஐ.டி.யில் முன்னிலையாகுமாறு கருணா அம்மானிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.