கரு ஜயசூரிய தலைமையில் நாளை கூடுகின்றது அரசியலமைப்பு சபை!

0

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை (வியாழக்கிழமை) அரசியலமைப்புச் சபை கூடவுள்ளது.

8 வது நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் இச்சந்திப்பு இடமபெறவுள்ளது.

இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என நாடாளுமன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.