கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் எமக்கு கட்டளையிட முடியாது என மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலின் இரண்டாம் வருட நினைவு தினம் நாளை அனுஸ்டிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அன்றையதினம் இரண்டு நிமிட மௌன அஞ்சலியினை செலுத்தவேண்டும் எனவும் விசேட வழிபாடுகளை முன்னெடுக்குமாறும் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இலங்கை முழுவதும் உள்ள ஆயர்கள் மற்றும் அருட்தந்தையர்களுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்.
எனினும், பேராயர் மல்கம் ரஞ்சித் கொழும்பு மறைமாவட்டத்திற்குதான் ஆயர், எனவே எங்களுக்கு எவ்வித அறிவுறுத்தல்களை வழங்குவதென்றாலும் அதனை எமது மறைமாவட்ட ஆயரே வழங்க முடியும் என அருட்தந்தை ஜெயபாலன் அவர் குறிப்பிட்டுள்ளார்.