கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி – சுகாதார அமைச்சு அறிவிப்பு

0

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை முதல் தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.

மகப்பேறு வைத்தியர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, ஒரு மாதத்திற்குள் கர்ப்பிணித் தாய்மார்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை நோக்கமாக கொண்டு அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அந்தவகையில் கொழும்பில் உள்ள பெண்களுக்கான கேஸில் ஸ்ட்ரீட் வைத்தியசாலை மற்றும் பிலியந்தலை எம்.ஓ.எச் அலுவலகத்திலும் தடுப்பூசி நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் இதுவரை நாட்டில் கொரோனா தொற்றினால் 8 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.