மட்டக்களப்பில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை

0

மட்டக்களப்பு – சின்ன ஊறணி பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சின்ன ஊறணி , பாடசாலை வீதியைச் சோந்த 25 வயதுடைய துவேந்திரன் துசாந்தினி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் 3 மாத கர்ப்பிணி பெண் என பொலிஸார் கூறியுள்ளனர்.

கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.