கல்குடாவில் ரயிலுடன் வாகனம் மோதி விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு

0

மட்டக்களப்பு- கல்குடா ரயில் கடவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் மட்டக்களப்பு- சேத்துக்குடாவைச் சேர்ந்த செபஸ்ரியன் அருள்நாதன் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சரக்கு ரயிலுடன் கென்டர் ரக வாகனமொன்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த வாகனம் தனது வேக கட்டுப்பாட்டினை இழந்தமையே விபத்துக்கு காரணமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.