கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

0

பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்ட காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் விண்ணப்பங்களை வழங்க முடியும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் நாளை மறுதினம் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.