கல்வி நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

0

தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக கால அட்டவணை வழமைக்கு திரும்பியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

இதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் தரம் 10,11,12 மற்றும் 13 மாணவர்களுக்கான கால அட்டவணை வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

இதற்கமைய குறித்த வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும் அரசாங்க பாடசாலைகள்,மற்றும் அரசாங்கம் அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இவ்வாறு வழமைக்கு திரும்பவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது