களனிப் பல்கலைக்கழக மாணவிக்கும் கொரோனா

0

களனிப் பல்கலைக்ழக மாணவி ஒருவருக்கும் கொவிட்19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

சமூக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த மாணவிக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

மினுவங்காெட பிரதேசத்தில் வசித்துவரும் இவரின் தந்தை மினுவங்கொட ஆடைத் தொழில்சாலையில் கடமையாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவியுடன் இருந்த மற்றும் இரு மாணவிகளுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, சிரி ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.