களுவாஞ்சிகுடி பகுதியிலும் கிருமி அழிப்பு நடவடிக்கை!

0

களுவாஞ்சிகுடி பகுதியிலும், பூரண ஊரடங்கு அமுலில், கிருமி அழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக, நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும், கடைப்பிடிக்கப்பட்டு வருவதோடு, களுவாஞ்சிகுடி பகுதியில் அமைந்துள்ள பொதுச்சந்தை அரச, அரச சார்பற்ற அமைப்புக்களின் காரியாலயங்கள், வங்கிகள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் வீதிகள் எதுவித வாகனங்களோ, சன நடமாட்டங்களோ அற்ற நிலையில் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர், வீதியில் வைத்தியசாலைக்குச் செல்லும் ஒரு சிலரைக் காணமுடிவதோடு, நோய்காவு வடி சேவையிலீடுபடுவதையும் காணமுடிகின்றது.

இது இவ்வாறு இருக்கையில் மக்கள் கூடும் இடங்கள், பேரூந்து தரிப்பிடங்கள், மற்றும் பொது இடங்களை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் சுகாதார உத்தியேதகஸ்த்தர்கள் கிருமி அழிப்பு செயற்பாடுகளை   முன்னெடுத்து வருவதையும் அவதானிக்க முடிந்துள்ளது.