காத்தான்குடியில் சற்று முன்னர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

0

மட்டக்களப்பில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சற்று முன்னர் மேலும் உயர்வடைந்துள்ளது.

இதன்படி, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் கொழும்புக்கு வேலை நிமிர்த்தமாக சென்று வந்து தனிமைப்படுத்தலில் இருந்தவர் எனவும், இதன்போது அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மக்கள் அவதானமாக செயற்படுமாறும், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை மக்கள் அடையாளம் கண்டு தெரிவிக்குமாறும், சன நடமாட்டத்தை குறைக்குமாறும் இயலுமானவரை வீட்டில் இருக்குமாறும் கிழக்கு மாகாண மக்களுக்கு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உரிய பிரதேசங்களின் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.