காத்தான்குடி கடலில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

0

மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் நீராடச் சென்றுக் காணாமல்போயிருந்த இளைஞர் இன்று (05) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதிய காத்தான்குடி பதுறியா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய முகம்மட் ஜவுபர் முகம்மட் ஸைனி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி ஆறாம் குறிச்சி கடலில்  மூன்று இளைஞர்கள்  நீராடச் சென்றிருந்த நிலையில், அதில் ஒரு இளைஞர் காணாமல் போயிருந்தார்.