காத்தான்குடி பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டது!

0

நாட்டில் மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, காத்தான்குடி பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கல்முனை பிரதேசத்தின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கல்முனை 01, கல்முனை 01 சீ, கல்முனை 01 ஈ, கல்முனை 02, கல்முனை 02 ஏ, கல்முனை 02 பீ, கல்முனை 03, கல்முனை 03 ஏ, கல்முனைகுடி 01, கல்முனைகுடி 02, கல்முனை குடி 03 ஆகிய பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடனேயே இந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.