காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 55 பேர் சிகிச்சையின் பின்னர் வீடுதிரும்பினர்!

0

கொரோனா வைரஸ் தொற்று குறித்த சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 55 பேர் சிகிச்சையின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மட்டக்களப்பு, காத்தான்குடி ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 62 பேரில் 55 பேரே குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

அத்துடன் ஏனைய 7 பேரும் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருவதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 62 பேரும் கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, வாழைத்தோட்டம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என வைத்தியப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.