கிணறுகளில் திடீரென நீர் வற்றியமை தொடர்பில் முக்கிய தகவல் வெளியானது!

0

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில பகுதிகளில் திடீரென கிணறுகளில் நீர் மட்டம் குறைவடைந்தமை தொடர்பில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் அதிகாரிகள் ஆய்வொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அனர்த்த முகாத்துமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

களுவாஞ்சிக்குடி மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் சில கிணறுகளில் திடீரென நீர் மட்டம் குறைவடைந்த நிலையில் மக்கள் அச்சத்திற்குள்ளாகியிருந்தனர்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றதாகவும் அது தொடர்பில் புவிசரிதவியல் அளவை பணியம் மற்றும் ஆய்வாளர்களுக்கும் அறிவித்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

மாதாந்தம் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து தமக்கு தகவல்கள் கிடைக்கப்பெறுவதாகவும் இடர்முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கிணறுகளில் நீர் வற்றுவதன் ஊடாக சுனாமி அனர்த்தம் ஏற்படப் போவதாக வௌியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவர் குறிப்பிட்டார்.