கிண்ணியா துப்பாக்கிச்சூடு: கைதான மூவரை தடுப்பு காவலில் விசாரிக்க அனுமதி

0

திருகோணமலை – கிண்ணியா – நடுவூற்று பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் கைதான மூன்று பேரையும் 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கிண்ணியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட நடுவூற்று பகுதியில் நேற்றிரவு

தனிப்பட்ட காரணங்களினால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது.

இதன்போது, 30 மற்றும் 35 வயதுடைய இருவர் காயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கின்னியா பகுதியைச் சேர்ந்த 30, 43 மற்றும் 54 வயதுடைய மூன்று பேர் இன்று காவல்துறையினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.