கிண்ணியா மாஞ்சோலைப் பகுதிக்கு பயணத்தடை

0

திருகோணமலை கிண்ணியாவிலுள்ள மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவு பகுதிக்கு இன்று(11) பயணத்தடை விதிக்கப் பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றாளர்கள் ஐவர் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உடனடியாக பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து அப்பிரதேச வதிவாளர்களுக்கு விரைவான அன்டிஜென் சோதனைகள் மற்றும் பிசிஆர் சோதனைகளை நடத்த மூன்று குழுக்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.a