கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் முஸ்லீம் இளைஞன் கைது!

0

கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் வைத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி அக்குரனையினைச் சேர்ந்த 25 வயதான இளைஞன் ஒருரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கிஸ்தவர்களினால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையிலயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து இவ்வாறு விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.