கிளிநொச்சியில் இருந்து ஒருவர் கொரோனா சந்தேகத்தில் யாழிற்கு அனுப்பிவைப்பு!

0

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளுடன் கிளிநொச்சியிலிருந்து ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி வெளிநாட்டிலிருந்து வந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனா அறிகுறி சந்தேகம் ஏற்பட்டதையடுத்து பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் யாழ். போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு அவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.