கிளிநொச்சி வாகன விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட மூவர் உயிழரிப்பு..!

0

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிய பயணித்துக் கொண்டிருந்த காருடன் , அதற்கு நேரெதிர் திசையில் பயணித்த  டிப்பர் ரக வாகனம்  மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

குறித்த டிப்பர்  வாகனம்  வேகக்கட்டுப்பபாட்டையிழந்து வீதியை விட்டு விலகி  காருடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், குறித்த சம்பவத்தில் பளை – தர்மங்கேணி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரும், 14 மற்றும் 11 வயதுடைய சிறுவர்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், குறித்த மூவரின் சடலங்களும்  பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகநபரான டிப்பர் வண்டியின் சாரதி தப்பியோடியுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான தேடுதலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.