கிழக்கில் சமூகங்கள் எதிர்கொண்ட பாதிப்புக்களைப் பற்றிய விபரம் திரட்டல்!

0

கிழக்கு மாகாணத்தில் கடந்த 40 வருட காலத்தில் சமூகங்கள் எதிர்கொண்ட பாதிப்புக்களைப் பற்றிய விபரம் திரட்டப்படுவதாக அம்மாகாண சமூக அநீதிகளை ஆராய்வதற்காக நியமிக்கபபட்ட நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட  பிரிவினைவாத நடவடிக்கை அல்லது முறையற்ற செயற்பாடுகள் அல்லது சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளால் பாதிப்பிற்குள்ளான தனிநபர்கள் அல்லது குழுக்களின் கவனத்தை ஈர்க்கும் பொது அறிவித்தலாக இது விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிப்பிற்குள்ளான தரப்பினர் தங்களது விபரங்களை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திலுள்ள சமூக அநீதிகளை ஆராய்வதற்கான நிபுணர்கள் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வாழ்விடம் நிலபுலன்களின் அழிவு, வாழ்வாதார இழப்பு பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கான உரித்து, சொத்துக்களின் அல்லது வேறு ஏதேனும் இழப்பு நிவாரணத்தைப் பெற பாதிக்கப்பட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போன்ற விவரங்கள் ஆவணங்களின் பிரதிகளுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.